
சிவகங்கை
கியாஸ் சிலிண்டரை தாமதமின்றி விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை நகரில் பழைய நீதிமன்றம் அருகே செயல்பட்டு வரும் கியாஸ் சிலிண்டர் அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 3 நாட்களாகியும் விநியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பல முறை அலுவலகத்தை தொடர்பு கொண்ட போதும் சரியான பதில் கிடைக்காததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.