'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!

Share this Video

தென் ஆந்திரக் கடலோரப் பகுதியில் தீவிரப் புயலாக மாறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ள 'முரசு' புயலின் கரையை கடக்கும் நிகழ்வை முன்னிட்டு, சென்னையில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் வழக்கத்தை விடக் கடலலைகள் ராட்சத அளவில் சீறிப் பாய்ந்து வருகின்றன. கரையை நோக்கி வரும் புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படும் பிரத்யேக காட்சித் தொகுப்புகள் இதோ!

Related Video