மக்கள் தொண்டே மகேசன் தொண்டு : சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுரை !

Share this Video

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்காக (MLA) பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது சட்டமன்ற தலைமைப் பண்பு பயிற்சித் திட்ட (First Legislative Leadership Programme) தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மாநில அமைச்சர்களான என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முகாமினைத் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிப் பணிகளைச் செம்மையாகச் செய்வது, சபை விதிகளைக் கடைப்பிடிப்பது மற்றும் மக்கள் நலத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவது குறித்தும் விவரித்துப் பேசினர்.

Related Video