
இலவசம் கொடுக்கும் அனைவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களே... சாட்டை அடியாக பதில் அளித்த சீமான்
தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகள் வழங்கும் இலவச திட்டங்களைக் கடுமையாக விமர்சித்த சீமான், "இலவசம் கொடுக்கும் அனைவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களே" என்றும், தமிழகத்தில் தற்போது நாம் தமிழர் கட்சிக்கும் மற்றவர்களுக்குமான இருமுனைப் போட்டி மட்டுமே நிலவுவதாகவும் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைச் சாடிய அவர், பறக்கும் படைகள் சாதாரண மக்களைத் துன்புறுத்துவதாகவும், ஆனால் வாக்குக்கு பணம் கொடுப்பவர்களைத் தடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார். பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தடை விதிப்பதே முறையான தீர்வாக அமையும் என்றும் அவர் காரைக்குடியில் ஆவேசமாகப் பேசினார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
