அதிமுக - திமுகவிற்கும் மட்டும்தான் போட்டி....ஒரு சதவீதம் கூட சசிகலா போட்டி இல்லை - ராஜன் செல்லப்பா !

Share this Video

சசிகலாவை மதிப்பிற்குரியவர்களாக வைத்திருந்தோம். இப்போது சசிகலா எங்களுக்கு போட்டி இல்லை.ஒரு சதவீதம் கூட சசிகலா போட்டி இல்லை. இன்றைக்கு தமிழகத்தில் நான்கு போட்டி என்று கூறுகிறார்கள். ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும், திமுக தலைமையான கூட்டணிக்கும் தான் இருமுனை போட்டி. அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது நாங்கள் எந்த உரிமையை விட்டுக் கொடுத்தோம் ? தமிழகத்தின் உரிமையை தான் பெற்று கொடுத்தோம். திமுகவிற்கு காரணம் கிடைக்கவில்லை என்பதற்காக இதுபோன்று பேசி வருகிறார்கள். தேசிய கட்சியோடு கூட்டணி தொகுதிப்பங்கீட்டை விரைந்து முடிக்க டெல்லி சென்றார் எடப்பாடியார் அதிமுகவின் கொள்கையை விட்டுக்கொடுக்கவே மாட்டார். காவிரி பிரச்சனையில் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து அதற்காக தீர்வு கண்டவர் எடப்பாடியார். திமுக போல ஒருபோதும் கொள்கைகளை நாங்கள் விட்டு கொடுத்தது கிடையாது .

Related Video