
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் : அரசின் அலட்சியத்தைக் கடுமையாகச் சாடிய திருமாவளவன் !
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தவெக - காங்கிரஸ் கூட்டணி நிலவரம், 2029 பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி மற்றும் விஜய்யின் பிரதமர் கனவு குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார். மேலும், சென்னையில் நீடிக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் மற்றும் அதிகாரத்தில் பெண்களுக்கான சம உரிமை, பிரதிநிதித்துவம் குறித்தும் தனது காரசாரமான கருத்துகளைப் பதிவு செய்தார்.