
தமிழகத்தில் பாஜக அரசியல் காய்நகர்த்தலா? சென்னை வந்து இறங்கிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா !
டெல்லி முதல்வர் ரேகா குப்தா சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். தமிழகத்தில் அவரது இந்த திடீர் வருகை அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. டெல்லி மாடலை வைத்து தமிழகத்தில் அரசியல் காய்நகர்த்தல்களைச் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகக் விமர்சனங்கள் எழுந்துள்ளன.