
தொகுதி மறுவரையறை பாஜகவின் சதி திட்டம்" – மாமல்லபுரத்தில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!
மாமல்லபுரத்தில் (மகாபலிபுரம்) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, மத்திய பாஜக அரசு கொண்டுவர நினைக்கும் 'தொகுதி மறுவரையறை' (Delimitation) திட்டம், தமிழக மக்களின் உரிமைகளையும் அரசியல் அதிகாரத்தையும் பறிப்பதற்காகச் செய்யப்படும் சதி என அவர் குற்றம்சாட்டினார். தமிழகத்திற்கும் அதன் எதிர்காலத்திற்கும் எதிரான இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் வரலாற்றுப் துரோகிகளாகக் கருதப்படுவார்கள் என்றும், தொகுதி மறுவரையறை முயற்சியை அனைத்துக் கட்சிகளும் இணைந்து தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.