உதயநிதி உதவி செஞ்சார்.! விஜயிடமும் உதவி கேட்பேன்.!ராகவா லாரன்ஸ் தில் பேட்டி.!

Share this Video

நடிகர் ராகவா லாரன்ஸ், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில், “திருச்சி கிழக்கில் நான் நிற்பது தர்மம் அல்ல. அந்தக் கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்தவர்களே போட்டியிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அரசியலுக்கு வரமாட்டேன் என்பதல்ல என்றும், சரியான நேரம் மற்றும் மக்களுக்கு நன்மை தரும் சூழலை ஆராய்ந்து முடிவு எடுப்பேன் என கூறினார். மேலும், அரசியலில் பதவி அல்லது சீட்டை விட மரியாதையே முக்கியம் என்றும், மக்களின் கருத்தை மதித்தே தனது அரசியல் பயணம் அமையும் என்றும் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video