
ஆவண எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காதே: இ-ஹப் திட்டத்தை எதிர்த்து ராமநாதபுரத்தில் போராட்டம்!
பத்திரப் பதிவுத்துறை சேவைகளை 'இ-ஹப்' (E-Hub) இ-டெண்டர் திட்டம் மூலம் தனியார்மயமாக்கும் முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமநாதபுரத்தில் ஆவண எழுத்தாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், ஆவணப் பதிவாளர் உதவியாளர்கள் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ரியல் எஸ்டேட் சங்கத் தலைவர் ஜெயபாண்டியன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். இ-ஹப் திட்டத்தால் தமிழகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான ஆவண எழுத்தாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையைச் சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், இத்திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.