
மாணவன் தமிழ்செல்வன் உயிரிழப்பு : குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் முற்றுகைப் போராட்டம்!
மதுரையில் 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்செல்வன் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி, இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI), அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUF) ஆகிய அமைப்புகள் சார்பில் தீவிர போராட்டம் நடைபெற்றது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், காவல்துறையின் செயல்பாட்டைக் கண்டித்தும் போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகே முழக்கங்களை எழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.