
"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் விஜய்யை நோக்கி எழுப்பிய காரசாரமான கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், "முகமூடி அணிந்து எங்கேயும் செல்ல மாட்டோம், எப்போதும் வெளிப்படையான ஆட்சியைத் தருவோம் என்று தேர்தல் களத்தில் முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்தார். ஆனால், அதற்கு மாறாக முதலமைச்சரின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு மர்ம நபர் ஒருவர் முகத்தை மூடிக்கொண்டு சென்றது ஏன்?" என வினவினார். இந்தச் சம்பவம் குறித்து அரசுத் தரப்பு சட்டமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மை கொண்ட ஆட்சியில் இத்தகைய ரகசியங்களுக்கு இடமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
