
13 மணி நேர அராஜக விசாரணை... கொதித்தெழுந்த எம்.எல்.ஏ-வின் மகன்! ஆளுங்கட்சியின் பழிவாங்கல் அம்பலம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ மார்கண்டேயன் கைது செய்யப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனையின் போது காவல்துறையினர் தம்மைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனிடையே, அவரது மகனும் ஊடகங்களைச் சந்தித்து, இந்த அராஜகக் கைதைக் கண்டித்து காவல்துறையின் பழிவாங்கும் நடவடிக்கையை அம்பலப்படுத்தியுள்ளார்.