தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!

Share this Video

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதை வலியுறுத்தினார். பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ரூ.6,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்குச் சான்றாகும் என குறிப்பிட்டார். தற்போதைய திமுக அரசு தமிழ் கலாச்சாரத்திற்கும், பெண்களின் கண்ணியத்திற்கும் எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், NDA கூட்டணி ஒரு குடும்பமாக இணைந்து செயல்படுவதைச் சுட்டிக்காட்டினார். "மத்தியில் மோடி, மாநிலத்தில் பழனிசாமி" என்ற இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் மட்டுமே தமிழகம் ஊழலற்ற, வளர்ச்சிப் பாதையில் செல்லும் எனவும் அவர் கூறினார்.

Related Video