
ஐயா முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை ! - மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!
ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கிய நிர்வாகிகள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜு ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். தவெக தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின்பேரில், மதுரையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளித்தனர்.