
திருச்சியில் ரயில் விபத்து ஒத்திகை : பேரழிவு மீட்பு படையினர் (NDRF) அதிரடி செயல்விளக்கம் !
திருச்சிராப்பள்ளியில் உள்ள ரயில்வே சரக்கு முனையத்தில் (Railway Goods Yard) ரயில்வே துறையும் தேசிய பேரிடர் மீட்புப் படையும் (NDRF) இணைந்து பிரம்மாண்ட ரயில் விபத்து மாதிரி ஒத்திகையை (Mock Drill) நடத்தின. இதில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்வது போன்றும், தீப்பிடிப்பது போன்றும் செயற்கையாக உருவாக்கப்பட்டு, மீட்புக் குழுவினர் அவசரகால மீட்புப் பணிகளைச் செய்து காட்டினர். கயிறுகள் மற்றும் வெட்டும் கருவிகளைப் பயன்படுத்திப் பயணிகளை மீட்கும் முறைகள் செயல்விளக்கம் அளிக்கப்பட்டன. அவசர காலத்தில் பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை என NDRF துணை கமாண்டன்ட் சுதாகர் தெரிவித்துள்ளார்.