
பழைய ஆட்சியை விடக் குறைவு எனச் சொல்லித் தப்பிக்காதீர்கள் - முஸ்லிம்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு !
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதிகளில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள், போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவைக் கண்டித்து, சென்னை வாழ் முஸ்லிம்களின் கூட்டமைப்பு சார்பில் அனைத்துக் கட்சியினர் மற்றும் வியாபாரிகள் ஒன்றிணைந்து திருவல்லிக்கேணியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.