
சட்டம் ஒழுங்கு சீர்கேடு... சோப்ளாங்கி அரசு" - முதலமைச்சர் விஜய்யை கடுமையாகச் சாடிய மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் கூட்டங்களில் சட்டம் ஒழுங்கு குறித்து பஞ்ச் டயலாக் பேசி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய், தற்போது குற்றங்களைக்கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கேரவனில் இருப்பது போல் யாராலும் அணுக முடியாத நிலையில் இருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், தவெக நிர்வாகிகள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் தன் கட்சியினரைக் கட்டுப்படுத்தினாலே பாதியளவு குற்றங்கள் குறையும் என்றும் குறிப்பிட்டார். இந்த ஆளத் தெரியாத அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் அக்டோபர் 31-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.