
கீழடியில் திடீர் ஆய்வு.....பார்வையிட்ட பின் தொல்லியல் துறைக்கு அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் ராஜ்மோகன்!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்திற்குத் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் நேரில் வருகை தந்து கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்காலப் பொருட்கள், தமிழர்களின் பண்பாட்டுச் சான்றுகள் மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, தமிழர்களின் தொன்மையை உலகறியச் செய்யவும், அருங்காட்சியகத்தைப் பராமரித்துப் பாதுகாக்கவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஊடகத்தினரிடம் விளக்கமளித்தார்.