
மாநில உரிமையில் அலட்சியமா?" — மருத்துவ சீட்கள் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு சரமாரி கேள்வி
அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை ஒப்படைப்பது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு குறித்துத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், காலியாக உள்ள இடங்களைத் தமிழகத்திற்கு மீட்டெடுக்கவும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், கரூர் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பான மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்வது குறித்தும் அவர் கருத்து பகிர்ந்துள்ளார்.