
21 தற்காலிக செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்!
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் பங்கேற்று, 21 தற்காலிக செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகளுக்கான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். குறிப்பிட்ட கல்லூரி மீதான புகாரின் அடிப்படையில் நேற்றைய தினம் DME மூலம் விசாரணை நடத்தப்பட்டது" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் பிரத்யேகக் காட்சிகள் மற்றும் அமைச்சரின் பேட்டி.