
தூத்துக்குடி பெருங்குளம் குளத்திற்குப் பருவமழைக்கு முன்னதாகவே வந்து குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!
தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருங்குளம் ஈரநிலப் பகுதிக்கு, வழக்கம் போல் வரும் பருவ காலத்திற்கு முன்பாகவே பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் புலம்பெயர் நீர்ப் பறவைகள் திரளாக வருகை தரத் தொடங்கியுள்ளன. அருகில் உள்ள பல நீர்நிலைகள் வற்றிவிட்ட நிலையில், பெருங்குளத்தில் போதிய நீர் இருப்பு உள்ளதால் பறவைகளுக்கு இது ஒரு முக்கிய புகலிடமாக மாறியுள்ளது.