சட்டப் புத்தகத்திற்கு எதிராக மனுஸ்மிருதியா? – RSS அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் !

Share this Video

சென்னை சேத்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் (RSS) மாநிலத் தலைமை அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூர்யா பிரகாஷ் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மனுஸ்மிருதி கொள்கைகளைப் பரப்புவதாகக் கூறி, மனுஸ்மிருதி புத்தகங்களை எரித்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இப்போராட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகக் கடுமையான கண்டனக் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பான ஆவேசமான காட்சிப்பதிவுகள், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூர்யா பிரகாஷின் சிறப்புப் பேட்டி (Sound Byte) மற்றும் ஆர்ப்பாட்டத்தின் நேரடிக் காட்சிகள்.

Related Video