மதுரையில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

Share this Video

பக்தி பரவசம்: மதுரையில் பால்குடம், வேல், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!மதுரை ஜெயம்புறா பகுதியில் உள்ள புகழ்பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.உள்ளூர்வாசியான பிரீமா கூறுகையில், இக்கோவில் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், வேண்டுதல்கள் நிறைவேறியதால் ஆண்டுக்காண்டு பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்த பக்தர்கள் பால்குடம், வேல், மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும், அம்மனுக்குச் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் இந்த அம்மனைத் தரிசித்து, நேர்த்திக்கடன் செலுத்த மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.

Related Video