மதுரை: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உடலுக்குப் பொதுமக்கள் திரண்டு அஞ்சலி !

Share this Video

மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா (90) அவர்களின் மறைவைத் தொடர்ந்து, அவரது பௌதிக உடல் பொதுமக்கள், தமிழார்வலர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரையில் உள்ள ஆரப்பாளையம் அருகேயுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுச் செய்தி கேட்டு அரசியல் தலைவர்கள், திரைப்பல பிரபலங்கள், தமிழ் சான்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக நேரில் வந்து மலர்வளையம் வைத்துத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். எளிமையான பேச்சு நடை மூலமாகத் தமிழ் இலக்கியத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த அவரது நினைவுகளைப் பகிர்ந்து பலரும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

Related Video