
84 ஆண்டு பொதுவாழ்க்கையில் கண்டிராத அரிய வாய்ப்பு : கோவையில் கி.வீரமணி செய்தியாளர்கள் சந்திப்பு
கோவையில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்ட பின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "இது வெறும் நூலகம் மட்டுமல்ல; நூலகமும் அறிவியலும் இணைந்த பேரறிவுலகம். மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராமல், தந்தை பெரியார் கண்ட 'இனிவரும் உலகம்' எப்படி இருக்கும் என்பதை நமது திராவிட நாயகன் மிக அருமையாகச் செய்திருக்கிறார். எனது 84 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் இத்தகைய அரிய சாதனையை நான் கண்டதில்லை" எனப் பாராட்டினார்.