
மாறுபட்ட கண்ணோட்டத்துடன் புதிய அரசியல் : கோவையில் கே. அண்ணாமலை பரபரப்பு பேட்டி !
கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 'வீ த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரசியல் மற்றும் நெறிமுறைகளுக்கான பயிற்சி மையம்' குறித்து கே. அண்ணாமலை விளக்கமளித்தார். அரசியலுக்கு வரும் புதிய தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம், மாநில பட்டியல், மத்திய அரசு விதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்புகள் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவை குறித்து தெளிவான பயிற்சி அளிப்பது மிக அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் தங்கள் அமைப்பின் சார்பாக வேட்பாளர்கள் களம் காண்பார்கள் என்றும், வழக்கமான அரசியலிலிருந்து மாறுபட்ட கண்ணோட்டத்துடன் தங்களது இயக்கம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.