தரமான கல்வியையும், சுகாதாரமான குடிநீரையும் இலவசமாக வழங்கிட வேண்டும்.! ஜாகுவார் தங்கம் கோரிக்கை !

Share this Video

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் ஜாகுவார் தங்கம் கலந்து கொண்டு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாகுவார் தங்கம், இளைய தளபதி விஜய் நல்லாட்சி கொடுத்து வருகிறார் என்றும், காமராஜர் போல முதலமைச்சர் விஜய் ஆட்சி செய்து புகழ்பெற்றிட வேண்டும் என்றார். முதலமைச்சர் விஜய் தனது மாணவன் என்றும், அவருக்கு 13 திரைப்படங்கள் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளேன் என்றும் பொதுவாகவே அதிகம் பேசாமல் மென்மையான குணம் கொண்ட விஜய் தனது செயலில் அனைத்தையும் நிரூபிப்பார் என்றார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அனைவருக்கும் தரமான இலவச கல்வியை வழங்கிட வேண்டும் எனவும், அனைவரும் விலை கொடுத்து பாட்டில் குடிநீர் வாங்கும் நிலையில், சுகாதாரமான குடிநீரை விலையின்றி அனைத்து தரப்பினருக்கும் வழங்கிட வேண்டும் எனவும், வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முதலமைச்சர் விஜய் ஆட்சியில் தமிழ்நாடு அமெரிக்கா போல முன்னேற வேண்டும் என வேண்டுகிறேன் எனவும், காவல்துறையில் ஒரு லட்சம் பேரை பணி நியமனம் செய்து 8 மணி நேரம் மட்டும் பணி வழங்கிட வேண்டும் என்றும் அப்போது கேட்டுக்கொண்டார்.

Related Video