நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள் !

Share this Video

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாகச் தாழ்வான பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் வீடுகளின் முன் நின்றிருந்த வாகனங்கள் மழைநீரில் பகுதி அளவு மூழ்கின. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளும் உள்ளூர் மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், மழை பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

Related Video