
கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த மழை: தொப்பிக் கானல் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம் !
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகத் தொப்பிக் கானல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளும் மீட்புக் குழுவினரும் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.