
தூத்துக்குடியில் பரவலாகப் பெய்த மழை: தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம்!
தூத்துக்குடி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரெனக் மேகமூட்டம் ஏற்பட்டு பரவலாகக் கனமழை பெய்தது. இதனால் நகரின் முக்கியச் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவியபோதிலும், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் சிறிது நேரத்திற்குச் சிரமத்திற்கு உள்ளாகினர்.