
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தனுஷ்கோடியில் "ராம யாத்ரா" நாட்டியாஞ்சலி விழா கோலாகலம்!
உலக சுற்றுலா தினத்தை (World Tourism Day) முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் "ராம யாத்ரா" நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரதநாட்டியக் கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு ஸ்ரீராமரின் புகழ்பாடும் பாடல்களுக்கு நாட்டியாஞ்சலி சமர்ப்பித்தனர். மேலும், சிறப்புப் பிரார்த்தனை, மௌன அஞ்சலி செலுத்துதல் மற்றும் மலர் தூவி வழிபாடு செய்யும் நிகழ்வுகளும் நடைபெற்றன.