நாளை நடைபெறுகிறது மதுரையின் மகத்தான திருவிழா: உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு!

Share this Video

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் (திருக்குடமுழுக்கு) நாளை மிக விமரிசையாக நடைபெறுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும், உலகெங்கிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர்.குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோவில் கோபுரங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்திற்காகப் பல்வேறு சிறப்பேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வரலாற்றுத் தருணத்தின் பிரம்மாண்டமான ட்ரோன் காட்சிகள் வெளியாகி பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Related Video