
விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் ! விவசாயிகளில் எச்சரிக்கை !
விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருச்சி மண்டலத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி, தேர்தல் வாக்குறுதிகளை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.