வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

Share this Video

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு மற்றும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் மற்றும் விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Related Video