
கடன் வசூல் நெருக்கடி மற்றும் ஜப்தி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு : விவசாயிகள் வைத்த கோரிக்கை!
திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கடன் கட்ட முடியாத விவசாயிகளைத் தொடர்ச்சியாக அச்சுறுத்துவது, நோட்டீஸ் அனுப்புவது மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அனைத்து விவசாயிகளும் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூட்டமைப்பினர் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் சிரமங்களைக் கனிவோடு பரிசீலித்து, கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தை ஐந்தாவது முறையாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், எவ்வித நிபந்தனையுமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் ₹1 லட்சம் வரை பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Related Video
Now Playing
Now Playing