
கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராக கொதித்தெழுந்த விவசாயிகள்! காவிரி நீரைக் காக்க தீவிர போராட்டம்!
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள CADA (Cauvery Command Area Development Authority) அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்றும், தங்கள் பகுதி விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டம் தொடர்பான காட்சிகள் மற்றும் விவசாயிகளின் காரசாரமான கண்டனக் குரல்கள் வெளியாகியுள்ளன.