எல் நினோ தாக்கம் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை: தவெக தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி

Share this Video

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கிய நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன், வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். சூப்பர் எல் நினோ தாக்கத்தின் காரணமாக ஏற்படக்கூடிய தீவிர மழைப்பொழிவு, மத்திய அரசிடமிருந்து கோரப்படும் பேரிடர் நிவாரண நிதி பயன்பாடு மற்றும் வறட்சி நிவாரண மதிப்பீடுகள் குறித்து பேசிய அவர், திமுக அரசின் தற்போதைய செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Video