
அதிமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பு - இபிஎஸ்
அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை அடைந்து விட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ''திமுக ஆட்சியில் விவசாய வளர்ச்சி 3% தான் இருந்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் விவசாய வளர்ச்சி 5.5% இருந்தது'' என்று தெரிவித்துள்ளார்.