
முடிவுக்கு வரும் திமுக - சிபிஎம் கூட்டணி? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணிக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது