தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !

Share this Video

சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து உருவக்கேலி (Body-shaming) மற்றும் தனிநபர் விமர்சனங்களை முன்வைத்ததாகக் கூறி, அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு திமுக அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் முடக்கங்களையும் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டிய அவர், தேர்தல் விதிகளை மீறி செயல்படும் திமுக மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Video