தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில்... மதுரையில் வீதிகளை ஆக்கிரமித்த ஷாப்பிங் பிரியர்கள்!

Share this Video

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், தூங்கா நகரமான மதுரையில் பண்டிகைக்கால பொருட்கள் வாங்குவதற்கான ஷாப்பிங் வேகம் அடைந்துள்ளது. மதுரையின் பிரதான வணிகப் பகுதியான விளக்குத்தூண் மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அங்குள்ள துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் மற்றும் நடைபாதை கடைகளில் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை வாங்க மக்கள் குடும்பத்துடன் திரண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பண்டிகைக்காலம் களைகட்டியுள்ளதுடன், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்படுகிறது. அங்குள்ள கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களின் நேரடிப் பேட்டி மற்றும் சுவாரஸ்யமான வீடியோ காட்சிகள் இதோ!

Related Video