முரசு புயல் எச்சரிக்கை: சென்னை மாநகராட்சியின் ICCC மையம் மூலம் தீவிர கண்காணிப்பு!

Share this Video

'முரசு' புயல் காரணமாகச் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், Greater Chennai Corporation-ன் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC) மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய முக்கிய இடங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் அனைத்தும் கேமராக்கள் மூலம் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மழைநீர் தேங்குதல் மற்றும் மரங்கள் சாய்வது போன்ற பருவமழை தொடர்பான பொதுமக்களின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாட்டு மையத்தில் அலுவலர்கள் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் நேரடி வீடியோ காட்சிகள் இதோ!

Related Video