
ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் – போராட்டத்தில் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் பேட்டி!
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஜனநாயகத்திற்குப் புறம்பாகவும், மத்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரிலும் செயல்படுவதாகக் கூறி, அவரது ராஜினாமாவை வலியுறுத்தி தூத்துக்குடியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சிபிஎம் (CPI-M) மத்திய குழு உறுப்பினர் பி. சம்பத், "தேர்தல் கமிஷன் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படாமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். தவறினால் இந்த போராட்டம் தேசம் தழுவிய அளவில் பெரும் கிளர்ச்சியாக மாறும்" என எச்சரித்தார்.