அகிலனின் மரணத்திற்கு நீதி வேண்டும் : நடைபெற்ற போராட்டத்தில் சிபிஐ(எம்) தலைவர் பி.சண்முகம் பேச்சு

Share this Video

கோவையில் மாணவன் அகிலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பி.சண்முகம் கண்டனம் தெரிவித்துப் பேசினார். கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் தொடர் கெடுபிடிகளே மாணவனின் முடிவுக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டிய அவர், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அகிலனின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இது குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிரான போராட்டம் அல்ல, மாணவனின் மரணத்திற்கு நீதி கேட்கும் போராட்டம் என்றும், இப்போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்திருப்பது வரவேற்பிற்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Video