
நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் விஜய் மரியாதை !
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 119-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு, வீரம் மற்றும் விவேகத்துடன் மக்களுக்காக வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.