
சோழிங்கநல்லூரில் ₹3,108 கோடி மதிப்பிலான குடிநீர்க் குழாய் திட்டம்: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
சென்னை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், சோழிங்கநல்லூரில் ₹3,108 கோடி மதிப்பீட்டில் பிரதான சுழல் குடிநீர்க் குழாய் (Main Ring Water Pipeline) அமைக்கும் திட்டத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வின் போது, சென்னை குடிநீர் வாரியத்தின் வரலாற்றுச் சிறப்புகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி மற்றும் இத்திட்ட மாதிரியையும் முதலமைச்சர் பார்வையிட்டார். இவிழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.