
மீனவ கிராமங்களில் வாக்குகள் வேட்டையாடிய முதல்வர்.! மீனவர் நலன் காக்கப்படும் என உத்தரவாதம்.!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக முதலமைச்சரும் கொளத்தூர் தொகுதி வேட்பாளருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மீனவச் சமூகத்தினரை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். மீனவர்களுடன் சகஜமாக உரையாடிய அவர், திமுக அரசு எப்போதும் மீனவர் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் என உறுதியளித்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்ததோடு, தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க மீண்டும் திமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இச்சந்திப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.