
டீக்கடை, மார்க்கெட் என எல்லா இடத்திலேயும் வாக்கு சேகரிப்பு! மக்களோடு மக்களாக டீ குடித்த முதலமைச்சர்
திருவண்ணாமலையில் 'கேஷுவல்' லுக்: மக்களுடன் மக்களாக முதல்வர் ஸ்டாலின்! திருவண்ணாமலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகவும் உற்சாகமாகவும், ஜாலியாகவும் ஒரு ரவுண்ட் வந்துள்ளார். வழக்கமான அரசியல் உடைகளைத் தவிர்த்து, டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து செம 'யங்' ஆக அவர் வாக்கு சேகரித்த விதம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. அதிகாலையிலேயே திருவண்ணாமலை வீதிகளில் மக்களோடு மக்களாக வாக்கிங் சென்ற முதல்வர், நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் நலம் விசாரித்துக்கொண்டே வாக்கு சேகரித்தார். அப்படியே வழியில் இருந்த ஒரு டீக்கடையில் அமர்ந்து, பொதுமக்களுடன் சகஜமாகப் பேசி டீ குடித்தது அந்தப் பகுதியையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து மார்க்கெட் பகுதிக்குச் சென்ற அவர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, தனது ஸ்டைலில் வாக்கு சேகரித்தார். ஒரு முதலமைச்சராகப் பார்க்காமல், தங்களில் ஒருவராக மிக எளிமையாகப் பழகிய முதலமைச்சருடன் பலரும் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.