
மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி மற்றும் கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்துத் தெரிவித்த கருத்துகளுக்குத் தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் மக்கள் அளித்தத் தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளாமல் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்து வருவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், கொளத்தூர் தொகுதி மறுஆய்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டிய அவர், ஜனநாயக முறையில் கிடைத்த வெற்றியைச் சிறுமைப்படுத்தும் வகையில் விமர்சனங்களை முன்வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.